12 டாஸ்மாக் பார்களுக்கு 'சீல்'
பழனியில் அனுமதியின்றி செயல்பட்ட 12 டாஸ்மாக் பார்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி செயல்படும் டாஸ்மாக் பார்கள் குறித்து கலால் துறை, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது அனுமதி இன்றி, உரிமத்தை புதுப்பிக்காமல் செயல்படும் பார்களை 'சீல்' வைத்து வருகின்றனர். அதன்படி நேற்று பழனி கோட்ட கலால் அலுவலர் சக்திவேலன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயக்குமார் தலைமையிலான அதிகாரிகள், போலீசார் பழனி பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது உரிமத்தை புதுப்பிக்காமல் அனுமதியின்றி செயல்பட்ட 12 டாஸ்மாக் பார்களை பூட்டி 'சீல்' வைத்தனர்.