மடவாமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பு

கொள்ளிடம் அருகே மடவாமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டது. இதை பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-08-27 17:53 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே மடவாமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டது. இதை பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மடவாமேடு கிராமம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடலோர மீனவ கிராமமான மடவாமேடு கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் இருந்து தினமும் 450 பேர் 250 பைபர் படகுகள் மூலம் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

இந்த பகுதியில் பிடிக்கப்படும் மீன்களை. வெளியூர்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர். இந்த நிலையில் மடவாமேடு கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கும் 600 மீட்டர் தூரம் கரை பகுதி கடலுக்குள் அடித்துச் சென்று விட்டது.

கடல் அரிப்பு

தினந்தோறும் கடல் அரிப்பு ஏற்பட்டு மணல் கடலுக்குள் சென்று வருகிறது. இதனால் மடவாமேடு கிராமத்தில் உள்ள குடியிருப்புகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, மடவாமேடு கிராமத்தில் கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மீன்பிடி பகுதியை பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது இந்த கிராமத்தில் கருங்கற்கள் கொட்டாததால் கடல் அலையின் சீற்றம் மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் கடல் அரிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் மீன்பிடித்து வரும் மீனவர்கள் தங்கள் படகுகளை கரைக்கு கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

கருங்கற்கள் கொட்டப்படும்

இதை தொடர்ந்து எம்.எல்.ஏ. கூறுகையில் மடவாமேடு கிராமத்தில் உடனடியாக மீன்வளத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தவுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரையோர பகுதிகளில் கருங்கற்கள் கொட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது உடன்ஒன்றிய குழுத்தலைவர் ஜெயபிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி, கிராமத் தலைவர்கள் கருணாமூர்த்தி, குணசேகரன் மற்றும் கிராம மக்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்