எஸ்.டி.பி.ஐ. பொதுக்கூட்டம்

சங்கரன்கோவிலில் எஸ்.டி.பி.ஐ. பொதுக்கூட்டம் நடந்தது.;

Update:2022-07-16 21:11 IST

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் மக்களாட்சியை பாதுகாப்போம் தேசிய பிரசாரத்தின் ஒரு பகுதியாக வரலாற்று கண்காட்சி மற்றும் மக்கள் சங்கமம் பொதுக்கூட்டம் எஸ்.டி.பி.ஐ. கட்சி நகர தலைவர் சதாம் உசேன் தலைமையில் நடைபெற்றது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் முஹம்மது அலி ஜின்னா, கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சியில் மாநில வர்த்தகர் அணி பொதுச் செயலாளர் ஜாபர்அலி உஸ்மானி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் லுக்மான் ஹக்கீம் ஆகியோரும் பேசினர்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அப்துல் பாசித் மற்றும் ஹக்கீம் சேட், மாவட்ட மக்கள் தொடர்பாளர் செய்யதலி பாதுஷா, மண்டல தலைவர் அய்யூப் கான், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேக் முஹம்மது ஒலி, நகர தலைவர் அபு தாஹிர், செயலாளர் சேக் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நகர செயலாளர் நிஸார் நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்