முன்விரோதத்தில் அரிவாள் வெட்டு ; 2 பேர் கைது
முன்விரோதத்தில் அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
தேவகோட்டை,
தேவகோட்டை அருகே உள்ள அடசிவயலை சேர்ந்தவர் நாகநாதன்(வயது 42). நேற்று முன்தினம் இரவு இவர் திருப்பத்தூர் ரோட்டில் கடைவீதியில் நின்ற போது முன்விரோதம் காரணமாக 2 பேர் அவரை பொதுமக்கள் முன்னிலையில் அரிவாளால் வெட்டினர். இதை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். படுகாயம் அடைந்த நாகநாதன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து நல்லங்குடியை சேர்ந்த மணிகண்டன்(29), பதுக்குடியை சேர்ந்த காளீஸ்வரன்(27) ஆகியோரை கைது செய்தனர்.