பள்ளியில் அறிவியல் கண்காட்சி
உடன்குடி சல்மா பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.;
உடன்குடி:
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உடன்குடி சல்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு அறிவியல் கண்காட்சி "சயின்ஸ் எக்ஸ்போ - 2022-ல் நிலையான முன்னேற்றத்திற்கு அறிவியலின் பங்களிப்பு" என்ற தலைப்பில் நடந்தது. பள்ளி முதல்வர் சார்லஸ் ஸ்வீட்லி வரவேற்றார். உடன்குடி வட்டார கல்வி அலுவலர் ஜெயவதி ரெத்னாவதி கண்காட்சியை தொங்கி வைத்து பேசினார்.
கண்காட்சியை பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பார்வையிட்டனர். கண்காட்சியில் மாணவர்கள் பல்வேறு பொருட்களை தயாரித்து தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்தினர்.