படியில் பயணம்;நொடியில் மரணம்: முன்பக்க படியில் தொங்கிய பள்ளி மாணவன்-பின்பக்க டயரில் சிக்கி பரிதாப பலி

பொதுவாக அனைத்து பஸ்களிலும் படியில் பயணம் நொடியில் மரணம் என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கும்.

Update: 2022-10-28 07:58 GMT

செங்கல்பட்டு,

பொதுவாக அனைத்து பஸ்களிலும் படியில் பயணம் நொடியில் மரணம் என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கும். இந்த வாசகமானது பொதுமக்கள் படிக்கட்டுகளில் தொங்காமல் இருக்கையில் அமர்ந்து பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பதற்காகவே ஒட்டப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் எந்த விதி முறையையும் பின்பற்றாமல் பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே செல்கிறார்கள். அதன் பிறகு பேருந்து நிற்கும்போது ஏறாமல் கிளம்பிய போது ஓடிச் சென்று பேருந்தில் ஏறுவது, ஜன்னல் கம்பிகளை பிடித்துக் கொண்டு பயணம் செய்வது போன்ற ஆபத்தான வேலைகளையே மாணவ-மாணவிகள் செய்கின்றனர். ஆனால் குறிப்பிட்ட சில ஊர்களில் பேருந்து சேவைகள் குறைவாக இருப்பதால் வேறு வழியில்லை படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவ மாணவிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்தநிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மேலகோட்டையூரில் அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்து 11ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு. பேருந்தின் முன்பக்க படியில் தொங்கியபடி சென்ற மாணவன், பின்பக்க டயரில் சிக்கி உயிரிழப்பு. பேருந்து தாம்பரத்தில் இருந்து மாமல்லபுரம் சென்றுகொண்டிருந்த போது மேலகோட்டையூர் பகுதியில் விபத்து. உயிரிழந்த மாணவன் யுவராஜ் மாம்பாக்கம் அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

மாணவர் உயிரிழந்ததை அறிந்த பெற்றோர் கதறி அழுதனர். மாணவர்களின் இதுபோன்ற விபரீத செயலால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை இழந்து துடிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்