சிறுமியை கர்ப்பமாக்கிய பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-19 21:15 GMT

ஜெயங்கொண்டம்:

பலாத்காரம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே முத்துச்சேர்வாமடம் கிராமத்தில் உள்ள பெரிய தெருவை சேர்ந்தவர் சம்பந்தம். இவரது மகன் வில்வேந்திரன் (வயது 34). திருமணம் ஆகாதவர். இவர் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர், 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானார்.

போக்சோவில் கைது

இதையடுத்து சிறுமி வில்வேந்திரனிடம் சென்று, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அப்போது வில்வேந்திரன் சிறுமியை திருமணம் செய்ய மறுத்துவிட்டதுடன், கர்ப்பத்தை கலைத்து விடு, இல்லையென்றால் இதை ஊர் முழுக்க சொல்லி உன்னை அவமானப்படுத்துவேன் என்று மிரட்டி உள்ளார்.

இதுபற்றி சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்தார். இதனால் பயந்து போன சிறுமியின் தாயார் மூலிகை மருத்துவம் மூலம், சிறுமியின் கர்ப்பத்தை கலைத்தார். மேலும் இது குறித்து சிறுமி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து வில்வேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்