பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.

Update: 2022-11-10 19:39 GMT

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையினை ஆற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரம்பலூரில் பள்ளி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு நடைபயண ஊர்வலம் நடந்தது. பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே புறப்பட்ட இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான ஸ்ரீவெங்கடபிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட பள்ளி மாணவ-மாணவிகள் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வது குறித்தும், வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமை என்பதை வலியுறுத்தியும், வாக்களிப்பதின் அவசியம் குறித்து பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். இந்த ஊர்வலம் வெங்கடேசபுரம், ரோவர் வளைவு, சங்குபேட்டை, காமராஜர் வளைவு வழியாக சென்று பெரம்பலூர் தாசில்தார் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்