பள்ளி மாணவர்கள் சாதனை
கராத்தே போட்டியில் சேர்வைகாரன்மடம் பள்ளி மாணவர்கள் சாதனை;
சாயர்புரம்:
சாயர்புரம் போப் பொறியியல் கல்லூரியில் 45-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மாநில அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டனர். இதில் சேர்வைகாரன்மடம் தேவா நர்சரி பிரைமரி பள்ளி மாணவர்கள் 116 போட்டிகளில் கலந்துகொண்டு 18 தங்கப்பதக்கமும், 28 வெள்ளிப் பதக்கமும், 40 வெண்கலப் பதக்கமும் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் ஜெயராஜன், முதல்வர் ஜீவா ராஜன், நிர்வாகி பிரதீப் குமார், பயிற்சியாளர் சுரேஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.