பள்ளி மாணவி மாயம்
மாயமான பள்ளி மாணவி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தா.பழூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகில் உள்ள இடங்கண்ணி அண்ணா சிலை தெருவில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன் மனைவி சுதா(43). இவருக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். சுதாவின் 2-வது மகள் ஜனனி(17) தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 23-ந் தேதி பொதுத்தேர்வு முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். இரவு அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்தபோது அதிகாலை 2 மணியளவில் திடீரென விழிப்பு வந்து பார்த்தபோது தன் அருகில் படுத்திருந்த ஜனனி காணவில்லை என்று கூறப்படுகிறது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் தா.பழூர் போலீஸ் நிலையத்தில் சுதா அளித்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.