பள்ளி மேலாண்மை குழு பயிற்சி பட்டறை

நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு பயிற்சி பட்டறை நடந்தது.

Update: 2023-08-02 20:41 GMT

நெல்லை மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் பள்ளி கல்வித்துறை சார்பில், பள்ளி மேலாண்மை குழு சார்பில் நெல்லை மாநகராட்சி மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி பட்டறை நேற்று நடந்தது.

மாநகராட்சி கல்விக்குழு தலைவர் பவுல்ராஜ் தலைமை தாங்கினார். மேயர் பி.எம்.சரவணன் தொடங்கி வைத்தார்.

இதில் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ல் கூறியுள்ளபடி அனைத்து பள்ளிகளிலும் கட்டமைக்கப்பட்டுள்ள பள்ளி வேளாண்மை குழு மற்றும் அதன் செயல்பாடுகளை பற்றியும், சட்டம் வலியுறுத்தும் குழந்தைகளின் உரிமைகள் பற்றியும், மாநகர நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சித் துறை பிரதிநிதிகளுக்கு எடுத்து கூறும் வகையிலும் பள்ளி வளர்ச்சி, குழந்தைகளின் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதில் நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்கு குறித்து விளக்கி கூறப்பட்டது.

மேலும் பள்ளி மேலாண்மை குழுவில் நகர்புற ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் பொறுப்பும், கடமையும் உணர்ந்து செயல்படுதல், பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் பள்ளி வளர்ச்சி முன்னேற்றம், பாதுகாப்பில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் பங்கை மேம்படுத்தும் வகையில் செயல்படுதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், மகேஸ்வரி, ரேவதி பிரபு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு, உதவி திட்ட அலுவலர் சிவராஜ், வட்டார மேற்பார்வையாளர் செண்பகாதேவி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாடசாமி, ஆசிரியர் பயிற்றுனர்கள் சுப்பிரமணியன், செல்வகுமார், மகளிர் திட்ட தொடர்பாளர் ரேவதி, பயிற்சியாளர் கவிதா மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்