பள்ளி மாணவி மாயம்
திமிரி அருகேபள்ளி மாணவி மாயமானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் ஆற்காடு அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாய் திமிரி போலீசில் புகார் செய்தார். அதன் பெயரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.