தூத்துக்குடி பொன்னகரத்தில் உள்ள எஸ்.டி.ஆர். பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு பள்ளி நிறைவு விழா நடந்தது. பள்ளி தலைவர் ரீனா விஜயசீலன் தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். பாதிரியார் ஜெய்சன் செல்வக்குமார், எபன் செல்வக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை ஆசீர்வதித்தனர். தொடர்ந்து மாணவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி இறைவனை வேண்டினர். பின்னர் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் ஆசி பெற்றனர்.