ஜன்னல் கம்பி மீது அமர்ந்து பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்

காட்பாடி வழியாக செல்லும் அரசு பஸ் ஜன்னல் கம்பி மீது அமர்ந்து ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

Update: 2022-12-23 17:39 GMT

காட்பாடி வழியாக செல்லும் அரசு பஸ் ஜன்னல் கம்பி மீது அமர்ந்து ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

ஜன்னல் கம்பியில் அமர்ந்து பயணம்

வேலூரில் இருந்து காட்பாடி, வள்ளிமலை, அம்மோர்பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவை வேலூரில் இருந்து காட்பாடி, திருவலம் வழியாக காலை, மாலை என இயக்கப்பட்டு வருகிறது. அரசு பஸ்களில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்கு செல்பவர்கள் என பலர் தினந்தோறும் பயணம் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் காலையில் பள்ளிக்கு வரும்போதும், மாலை வேளைகளில் பள்ளி முடிந்து வீடு திரும்பும்போதும் மாணவர்கள் போதிய பஸ் வசதி இல்லாத காரணத்தினால் அவ்வப்போது பஸ் படிக்கட்டுகளில் தொங்கியவாறு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் காலை காட்பாடியில் இருந்து பிரம்மபுரம் நோக்கி சென்ற அரசு பஸ்சில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியவாறும், பஸ் ஜன்னல் கம்பிகள் மீது அமர்ந்தும் மிகவும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்.

கூடுதல் பஸ்கள்

இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இது போன்ற செயல்களை தடுக்கும் வகையில் காலை மற்றும் மாலை வேளைகளில் காட்பாடி வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். அப்போது தான் மாணவர்கள் இது போன்ற ஆபத்தான பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பார்கள் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்