செல்போன் செயலி மூலம் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

செல்போன் செயலி மூலம் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

Update: 2022-12-20 21:34 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் சார்பில் 6 முதல் 18 வயது வரையுள்ள பள்ளிச் செல்லா இடைநின்ற, மாற்றுத்திறனுடைய குழந்தைகளை கண்டறிய சிறப்பு கணக்கெடுப்பு பணி கடந்த 19-ந் தேதி தொடங்கியது. இந்த பணி வருகிற 11-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பணியை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி புகழேந்தி தலைமையில் ஒருங்கிணைப்பாளர் ஹரி பிரியா, ஆசிரியர் பயிற்றுனர்கள் ரெஜி, ஜெசிகா உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகிறார்கள். கணக்கெடுப்பிற்கான தரவுகள் அனைத்தையும் உள்ளீடு செய்து கணக்கெடுப்பு மேற்கொள்ளும் வகையில் ஒரு செல்போன் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. பள்ளியில் குழந்தைகள் செல்லா காரணத்தை கண்டறிந்து குழந்தைகளை பள்ளியில் மீண்டும் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுப்பதே இந்த கணக்கெடுப்பின் முக்கிய நோக்கமாகும்.

இப்பணியை உதவித்திட்ட அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், அனைத்து வட்டார வளமையத்தில் உள்ள மேற்பார்வையாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தொடர்புடைய பிறத்துறை அலுவலர்கள் இணைந்து நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2 நாட்களாக செல்போன் செயலி மூலம் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்