மழலையர் பள்ளியில் ஆண்டு விழா
மழலையர் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
நாகை மாவட்டம் கீழ்வேளூரில் உள்ள ஜெயங்கொண்டம் மாடர்ன் கல்வி குழுமத்தின் துணை நிறுவனமான கீழ்வேளூர் பிரபாகர் நினைவு மழலையர், தொடக்கப்பள்ளியில் 48-வது ஆண்டுவிழா நடந்தது. விழாவுக்கு பள்ளி தாளாளர் பழனிவேல் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் குணவதி வரவேற்றார். பள்ளி ஆண்டறிக்கையை செல்வி படித்தார். விழாவை கலைச்செல்வி தொகுத்து வழங்கினார். விழாவில் கலெக்டர் அருண்தம்புராஜ் கலந்து கொண்டு தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். இதில் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) முருகன், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், வட்டார கல்வி அலுவலர்கள் சிவக்குமார், மணிகண்டன், மாடர்ன் கல்விக் குழுமத்தின் துணைத்தலைவர் சுரேஷ், செயலாளர் மகேஸ்வரி, நிர்வாக இயக்குனர் இலக்கியா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.