தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் திட்டம் வேளாண் உதவி இயக்குனர் தகவல்
திருமருகல் ஒன்றியத்தில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் திட்டத்தில் விவசாயிகள் பயன் அடையலாம் என திருமருகல் வட்டார வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) கலைச்செல்வன் கூறி உள்ளார்.
திருமருகல் ஒன்றியத்தில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் திட்டத்தில் விவசாயிகள் பயன் அடையலாம் என திருமருகல் வட்டார வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) கலைச்செல்வன் கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேளாண் வளர்ச்சி திட்டம்
2022-23-ம் நிதி ஆண்டுக்கான அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் புத்தகரம், திருப்புகலூர், ஆதலையூர், பண்டாரவாடை, காரையூர், நெய்க்குப்பை, கோபுராஜபுரம், ஆலத்தூர், திருச்செங்காட்டங்குடி, கீழத்தஞ்சாவூர், மருங்கூர் உள்ளிட்ட 11 கிராமங்கள் தேர்தெடுக்கப்பட்டு உள்ளன.
இந்த திட்டத்தின் முதல் கட்டமாக கிராமங்களில் தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்றப்பட உள்ளன. இதற்காக 15 ஏக்கருக்கு மேல் தொடர்ச்சியாக தரிசு நிலங்களை கொண்ட குறைந்தபட்சம் 8 விவசாயிகளை கொண்ட தரிசு நில தொகுப்பில் இலவசமாக ஆழ்துளைக்கிணறு வசதி ஏற்பாடு செய்து தரப்படும்.
15 ஏக்கருக்கு மேல்...
இந்த திட்டத்தில் பயன் அடைய விருப்பம் உள்ள விவசாயிகள் மேற்குறிப்பிடப்பட்ட கிராமங்களில் 15 ஏக்கருக்கு மேல் தொடர்ச்சியாக தரிசு நிலமாக காணப்பட்டால் சம்பந்தப்பட்ட உதவி வேளாண்மை அலுவலரை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.