தமிழகத்தில் பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை நாளை வெளியீடு

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை `நாளை வெளியிடப்பட உள்ளது

Update: 2024-10-13 09:25 GMT

சென்னை,

தமிழகத்தில் பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை நாளை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அதன்படி 2024-25ம் கல்வியாண்டிற்கான 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை `நாளை  வெளியிடப்பட உள்ளது.பொதுத்தேர்வு அட்டவணையை கோவையில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷ்  வெளியிட உள்ளார்.

தமிழகத்தில் பொதுவாக 10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்