சத்தியமங்கலம் மார்க்கெட்டில் முல்லை பூ கிலோ ரூ.660-க்கு ஏலம்

முல்லை பூ

Update: 2023-04-01 20:11 GMT

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி வழக்கம்போல் நேற்று காலை 7 மணிக்கு பூக்கள் ஏலம் தொடங்கியது.

இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 2 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.595-க்கும், முல்லை ரூ.660-க்கும், காக்கடா ரூ.450-க்கும், செண்டுமல்லி ரூ.89-க்கும், பட்டு்ப்பூ ரூ.93-க்கும், கனகாம்பரம் ரூ.300-க்கும், சம்பங்கி ரூ.60-க்கும், அரளி ரூ.90-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.240-க்கும் ஏலம் போனது.

Tags:    

மேலும் செய்திகள்