சாரண, சாரணிய இயக்க தொடக்க விழா

நயினார்கோவில் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சாரண, சாரணிய இயக்க தொடக்க விழா நடந்தது.

Update: 2023-07-18 18:45 GMT

நயினார்கோவில், 

பரமக்குடி தாலுகா நயினார்கோவில் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சாரண, சாரணிய இயக்க தொடக்க விழா தாளையடி கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு நயினார்கோவில் வட்டார கல்வி அலுவலர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மற்றொரு வட்டாரக் கல்வி அலுவலர் வாசுகி முன்னிலை வகித்தார். தாளையடிகோட்டை பள்ளி தலைமை ஆசிரியர் சித்திகா அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) பிரின்ஸ் ஆரோக்கியராஜ் சாரண, சாரணிய இயக்கத்தை தொடங்கி வைத்து பேசும் போது, சாரண இயக்கம் மூலம் பள்ளி மாணவர்களிடம் ஆளுமைத்திறன், தலைமைப் பண்புகள் போன்ற திறன் வளரும் என்றார். மதுரை மாவட்ட சாரணர் பயிற்சி ஆணையர் ராஜசேகர், ராமநாதபுரம் மாவட்ட சாரண இயக்க ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சாரண இயக்கத்தின் நோக்கம், குறிக்கோள், வரலாறு, அதன் செயல்பாடுகள், சாதனைகள் பற்றிக் கூறினர். உதயகுடி பள்ளி பட்டதாரி ஆசிரியர் மரிய சவுரி ஜான்சிராணி நன்றி கூறினார். இதில் பொட்டகவயல் அரசு மேல்நிலைப்பள்ளி சாரண கேப்டன் மகாராணி, நயினார்கோவில் வட்டார நடுநிலைப் பள்ளிகளின் சாரணர் இயக்க ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்