தொழிலாளி கொலை வழக்கில் வாலிபர் கோர்ட்டில் சரண்

நெல்லை அருகே நடந்த தொழிலாளி கொலை வழக்கில் கோவில்பட்டி கோர்ட்டில் வாலிபர் சரண் அடைந்தார்;

Update:2022-11-24 03:12 IST

பேட்டை:

நெல்லை அருகே நடந்த தொழிலாளி கொலை வழக்கில் கோவில்பட்டி கோர்ட்டில் வாலிபர் சரண் அடைந்தார்.

தொழிலாளி கொலை

நெல்லை அருகே உள்ள நடுக்கல்லூர் தெற்கு தெருவை சேர்ந்த குமாரவேல் மகன் நம்பிராஜன் (வயது 29). இவர் பேட்டை சிப்காட் தொழில் பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 21-ந் தேதி வேலைக்கு சென்ற போது, நம்பிராஜனை மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்தது.

இதுதொடர்பாக பேட்டை போலீசார், 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கோடகநல்லூரை சேர்ந்த பாலசுந்தர், நடுக்கல்லூரை சேர்ந்த ஆதிவேலாயுத பெருமாள், கோபாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வந்தனர்.

கோர்ட்டில் சரண்

இந்த நிலையில் கொலை தொடர்பாக நடுக்கல்லூரை சேர்ந்த சுந்தரபாண்டி (30) என்பவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி குற்றவியல் ேகார்ட்டு 1-ல் நேற்று சரண் அடைந்தார். அவரை வருகிற 30-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி கடற்கரை செல்வம் உத்தரவிட்டார்.

மேலும் நடுக்கல்லூர், கோடகநல்லூர், சுத்தமல்லி, ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்