இரட்டைக்கொலையில் இளம்பெண் சரண்
இரட்டைக்கொலையில் இளம்பெண் சரண் அடைந்தார்.;
சிவகாசி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்டேட் பேங்க் காலனியில் நேற்று முன்தினம் காலையில் குடும்பத்தகராறில் முருகேசுவரி (வயது 50), கருப்பாயி தமயந்தி (60) ஆகிய இரண்டு பேரும் உறவினரான காளிராஜன் என்பவரால் குத்தி கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து காளிராஜன் திருத்தங்கல் போலீசில் சரண் அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காளிராஜன் மற்றும் அவரது தங்கை ரதிலட்சுமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் போலீசார் தன்னை தேடுவதை அறிந்த ரதிலட்சுமி (30) தனது உறவினர் ஒருவருடன் பழனிக்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு சென்று தலைமறைவாக இருந்த அவர் நேற்று வக்கீல் ஒருவர் உதவியுடன் திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரிடம் போலீசார் கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. ரதிலட்சுமியிடம் முழு விசாரணை நடத்திய பிறகு தான் இந்த கொலைக்கான உண்மையான பின்னணி தெரியவரும் என போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.