ஓட்டேரி பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

வேலூர் மாநகராட்சி சார்பில் ஓட்டேரி பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-05-14 17:29 GMT

வேலூர் மாநகராட்சி 3-வது மண்டலம் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் நீர்நிலைகளை தூய்மைப்படுத்துதல் மற்றும் கரையோர பகுதிகளில் மரக்கன்றுகள் நடுதல் நிகழ்ச்சி ஓட்டேரி ஏரி மற்றும் பூங்காவில் நடந்தது. வேலூர் மாநகர் நலஅலுவலர் கணேஷ் தலைமை தாங்கினார். சுகாதார அலுவலர் பாலமுருகன், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சாய்நாதபுரம் டி.கே.எம். கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு ஓட்டேரி ஏரி மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். பின்னர் ஓட்டேரி பூங்காவில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டனர்.

நிகழ்ச்சியில் துப்புரவு மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா பரப்புரையாளர்கள், மண்டல மேற்பார்வையாளர் உள்பட பலர் கலந்து கொண்டு தூய்மையான நகரத்தை உருவாக்குவது தொடர்பாக அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்