தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணராயபுரம் உட்கோட்ட நெடுஞ்சாலை கட்டுமான மற்றும் பராமரிப்பு துறை சார்பில் கரூர்-வையம்பட்டி மாநில நெடுஞ்சாலையில் வரவணை பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு அந்த பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வேம்பு, புங்கன், அத்தி, பூவரசு மரக்கன்றுகளை நட்டு தொடர்ந்து அவற்றை பராமரிக்கும் பணியினை தொடங்கி வைத்தார்கள். இதில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.