மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆரணி
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ஆரணி நகராட்சி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி ஆணையாளர் பி. தமிழ்ச்செல்வி மரக்கன்றுகள் நட்டார்.
அலுவலக மேலாளர் நெடுமாறன், பொறியாளர் டி. ராஜவிஜயகாமராஜ், சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் மோகன் உள்பட களப் பணியாளர்கள், அலுவலர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.