திருவாரூரில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

திருவாரூரில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

Update: 2023-06-08 18:45 GMT

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து மாநில நெடுஞ்சாலைகளிலும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றும், இதனால் மாநில நெடுஞ்சாலைகளில் இடைவெளி இல்லாமல் மரங்கள் வளர்க்கப்படும் என்ற இலக்கு எட்டப்படும் என்றும் சட்டசபையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந்தேதி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் ஒருபகுதியாக நேற்று திருவாரூரை அடுத்த பவித்திரமாணிக்கம் பகுதியில் திருவாரூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. இந்த விழாவை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து வேளாண் ஆராய்ச்சி மையம் அருகே சாலையோரத்தில் மரக்கன்று நட்டுவைத்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், கோட்டப்பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) இளம்வழுதி, உதவி கோட்டப்பொறியாளர் மாரிமுத்து உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்