அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா
அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
வெள்ளியணை,
கடவூர் வட்டம் காணியாளம்பட்டியில் செயல்பட்டுவரும் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் நேரு யுவகேந்திரா அமைப்பு சார்பில் வளாக தூய்மை பணி மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதற்கு கல்லூரியின் முதல்வர் தேன்மொழி தலைமை தாங்கினார். இதில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் வளாகம் முழுவதும் தூய்மை பணியை மேற்கொண்டனர். பின்னர் வளாகத்தில் பயன்தரும் பழவகை மரக்கன்றுகள் மற்றும் நிழல் தரும் நாட்டு மரக்கன்றுகளையும் நட்டனர். இதற்கான ஏற்பாடுகளை நேரு யுவகேந்திராவை சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் சமூக செயற்பாட்டாளர் மணிகண்டன், .கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் குணசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.