செம்பட்டியில் மரக்கன்றுகள் நடும் விழா

செம்பட்டியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.;

Update:2023-10-15 03:00 IST

நெடுஞ்சாலைத்துறை சார்பில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா செம்பட்டி அருகே நடந்தது. அதன்படி மெட்டூர்-பழக்கனூத்து சாலை, ஒட்டன்சத்திரம்-திருப்பூர் சாலை குயவநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதில் நெடுஞ்சாலைத்துறையின் திண்டுக்கல் கோட்ட பொறியாளர் கே.பி.சங்கர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். உதவி கோட்ட பொறியாளர்கள் எஸ்.கண்ணன் (ஆத்தூர்), கே.வீரன் (வத்தலகுண்டு), உதவி பொறியாளர்கள் மற்றும் சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்