சண்முகநதியில் தூய்மை பணி

பழனி சுப்ரமண்யா கலைக்கல்லூரி சார்பில் சண்முகநதி பகுதியில் தூய்மை பணி நேற்று நடைபெற்றது.

Update: 2023-09-23 23:15 GMT

பழனி சுப்ரமண்யா கலைக்கல்லூரி சார்பில் சண்முகநதி பகுதியில் தூய்மை பணி நேற்று நடைபெற்றது. இதற்கு கல்லூரி தலைவர் சுப்ரமணி தலைமை தாங்கினார். கல்லூரியின் நிர்வாக தலைவர் சுவேதா முன்னிலை வகித்தார். சிவகிரிப்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் மாரியப்பன் கலந்துகொண்டு பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் என 500-க்கும் மேற்பட்டோர் சண்முகநதி பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். அப்போது நதியின் நீர்ப்பிடிப்பு மற்றும் கரைப்பகுதியில் கிடந்த குப்பைகள், பழைய துணிகள் என சுமார் 2 டன் குப்பைகள் அகற்றப்பட்டது. மேலும் அங்கு வந்த பக்தர்களுக்கும் நீர்நிலை பாதுகாப்பு, முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினர் கூறும்போது, "பழனியின் புண்ணிய நதியாக சண்முகநதி திகழ்கிறது. எனவே நதியை தூய்மையாக வைக்கவும், மாசுபாட்டை தடுக்கவும் கல்லூரி நிர்வாகம் சார்பிலும் வரும் நாட்களிலும் தூய்மை பணி மேற்கொள்ளப்படும்" என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்