தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

மணல் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-01 21:15 GMT

பாபநாசம்;

பாபநாசம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராஜகிரி குடமுருட்டி ஆற்றில் இருந்து அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்த வாலிபரை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்து தப்பி ஓடிய வாலிபரை தேடி வந்தனர். இந்தநிலையில் பாபநாசம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி மணல் கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜகிரி அம்பேத்கார் தெருவை சேர்ந்த தினகரன் (வயது 21) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

Tags:    

மேலும் செய்திகள்