அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டிகள் பறிமுதல்

திருவோணம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-08-02 21:39 GMT

ஒரத்தநாடு;

திருவோணத்தை அடுத்துள்ள வாட்டாத்திக்கோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள அரசுக்கு சொந்தமான ஆற்றுப்படுகைகளில் இருந்து அனுமதி இன்றி திருட்டுத்தனமாக மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து வாட்டாத்திக்கோட்டை போலீசார் நேற்று முன்தினம் அந்தபகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அக்னியாறு 42 கண் பாலம் அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்திய நபர்களை போலீசார் சுற்றிவளைத்தனர். அப்போது மணல் கடத்தியவர்கள் மாட்டு வண்டிகளை அங்கேயே விட்டு-விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.இதைத்தொடா்ந்து போலீசார் மணல் ஏற்றப்பட்ட மாட்டுவண்டிகளை மணலுடன் பறிமுதல் செய்து வாட்டாத்திக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றனர். மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்டு தப்பி ஓடி தலைமறைவாக உள்ள ஈச்சன்விடுதியைச் சேர்ந்த நாஞ்சில் மனோகரன், சேகர், செருவாவிடுதியைச் சேர்ந்த பழனி, துரை, ராமன் ஆகிய 5 பேரையும் தேடி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்