மொபட்டில் மணல் கடத்தியவர் கைது
மொபட்டில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.;
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையிலான போலீசார் முடிகொண்டான், சேனாபதி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் 4 முட்டைகளில் மணல் கடத்தி வந்த அண்ணிமங்களம் கிராமத்தை சேர்ந்த பகவான்சிங்கை(49) பிடித்து, மொபட்டை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.