வண்டலூர்- வாலாஜாபாத் 6 வழி சாலையில் மணல் குவியல்; வாகன ஓட்டிகள் அவதி

வண்டலூர்- வாலாஜாபாத் 6 வழி சாலையில் மணல் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

Update: 2023-07-30 08:55 GMT

காஞ்சீபுரம் மாவட்டத்தில் முக்கிய சாலையாக வண்டலூர்- வாலாஜாபாத் 6 வழி சாலை உள்ளது. இந்த சாலையின் நடுவில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு வண்டலூர் பகுதியில் இருந்து வாலாஜாபாத் செல்வதற்கு 3 வரிசையாகவும் படப்பையில் இருந்து தாம்பரம் செல்லும் பகுதியில் 3 வரிசையாகவும் இந்த 6 வழி சாலை செல்கிறது. ஆனால் படப்பையில் இருந்து தாம்பரம் செல்லும் சாலையில் படப்பை பகுதியில் மணல் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள் ளாகின்றனர். மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மணலில் சிக்கி அடிக்கடி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். லேசான மழை பெய்தாலே இந்த பகுதி சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. இந்த பகுதியில் சாலையோரம் கிடக்கும் மணலை அகற்றி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வாகனங்கள் செல்வதற்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்