கோவிலில் சாமி சிலைகள் கொள்ளை
கலிங்கப்பட்டி அருகே கோவிலில் சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
சங்கரன்கோவில்:
கலிங்கப்பட்டி அருகே உள்ள மேல மரத்தோணி குளக்கரையில் அய்யனார் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோவிலில் சம்பவத்தன்று பூர்ணகலா, புஷ்பகலா, அய்யனார் ஆகிய 3 சாமி கற்சிலைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகி அழகர்சாமி கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.