பேரிகை அருகேவீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது 3 சாமி சிலைகள் கண்டெடுப்பு
பேரிகை அருகே வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது 3 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சூளகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே அத்திமுகம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது35). இவர், நேற்று தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது, பூமிக்கடியில் 3 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சூளகிரி தாசில்தார் சக்திவேல் சம்பவ இடத்திற்கு சென்று சிலைகளை மீட்டு விசாரணை நடத்தினார். மேலும், பேரிகை போலீசாரும் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.