திருவெறும்பூர் அருகே சமத்துவ பொங்கல் விழா
திருவெறும்பூர் அருகே சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
திருவெறும்பூர் அருகே நவல்பட்டு ஊராட்சி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜேம்ஸ் தலைமை தாஙகினார். சிறப்பு விருந்தினராக ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கங்காதரணி கலந்துகொண்டார். விழாவில் பெண்களுக்கான கோல போட்டிகள், உரியடி போட்டி, இசை நாற்காலி உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சமத்துவத்தை போற்றும் வகையில் கிறிஸ்தவ பாதிரியார், கோவில் பூசாரி, முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் பரிசுகளை வழங்கினர். விழாவில் திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் அப்பகுதி பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.