உப்பு சத்தியாகிரக நினைவு தினம் அனுசரிப்பு
உப்பு சத்தியாகிரக நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
ஆங்கிலேய அரசு உப்புக்கு வரி போட்டதை கண்டித்து கடந்த 1930-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந் தேதி திருச்சி ஜங்ஷனில் இருந்து வேதாரண்யம் வரை ராஜாஜி தலைமையில் பாதயாத்திரையாக சென்றனர். இதன் நினைவுநாளையொட்டி தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் ஜங்ஷன் உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபி முன்பு நினைவுநாள் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. கடலூர் மாவட்ட தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, காந்தி, காமராஜர், ராஜாஜி சிலைகளுக்கு மலரஞ்சலி செலுத்தி உப்புசத்தியாகிரக பாதயாத்திரை நிகழ்வை பற்றி விளக்கி பேசினர். இதில் காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.