சேலம்: வீட்டில் சிலிண்டர் வெடித்து விபத்து - இரண்டு சிறுவர்கள் உட்பட 8 பேர் காயம்

சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை அருகே வீட்டில் சிலிண்டர் வெடித்து விபத்துக்கு உள்ளானதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 8 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-10-17 02:29 GMT

பொன்னம்மாப்பேட்டை,

சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை அண்ணா நகர் பகுதியில் மாணிக்கம் என்பவர் வீட்டில் சிலிண்டர் வெடித்து விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் முதல் மாடியில் இருந்து சுவர்கள் இடிந்து விழுந்ததில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 8 பேர் காயம் அடைந்தனர்.

விபத்தில் காயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்