தண்டவாள பராமரிப்பு பணி: சேலம்- கோவை பாசஞ்சர் ரெயில் 31-ந் தேதி வரை ரத்து
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சேலம்- கோவை பாசஞ்சர் ரெயில் 31-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
சூரமங்கலம்:
கோவை மார்க்கம் வாஞ்சிபாளையம்- சோமனூர் இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது. கோவை- சேலம் பாசஞ்சர் ரெயில் (06802) மற்றும் சேலம் - கோவை பாசஞ்சர் (06803) ஆகிய ரெயில்கள் நேற்று முதல் வருகிற 31-ந் தேி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
மேலும் திருப்பூர், வாஞ்சிபாளையம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதையொட்டி சேலம் வழியாக இயக்கப்படும் ரெயிலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, அதன்படி ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (13352) ஆலப்புழா ரெயில் நிலையத்தில் இருந்து இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில் 3 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு புறப்படும், எர்ணாகுளம் - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (12678) எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 9.10 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில் 2 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாக 11.40 மணிக்கு புறப்படும். இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.