இன்று முதல் 31-ந் தேதி வரை சேலம்-கோவை பயணிகள் ரெயில் ரத்து

இன்று முதல் 31-ந் தேதி வரை சேலம்-கோவை பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.;

Update:2023-07-01 02:48 IST

சூரமங்கலம்:

சேலம்-கோவை இடையே மெமு ரெயில் எனப்படும் பயணிகள் ரெயில் (வண்டி எண்-06803) ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இதே போல் மறுமார்க்கத்திலும் (வண்டி எண்-06802) இந்த ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சேலம்-ஈரோடு வரையிலான தண்டவாள பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை ஒரு மாதத்திற்கு இந்த இரு மார்க்கங்களிலும் மெமு ரெயில் ரத்து செய்யப்படுகிறது என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்