'தமிழகத்தில் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு; பெற்றோர்கள் நம்பி அனுப்புவார்கள்' - கவர்னர் ஆர்.என்.ரவி பெருமிதம்

தமிழக மக்கள் நட்பாக பழகி உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள் என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

Update: 2023-06-20 10:00 GMT

சென்னை,

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் தேசிய ஒருமைப்பாட்டு முகாம் தொடக்க விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்த அவர், பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கல்வி கற்பதற்கு தமிழகத்திற்கு வரும் போது மகிழ்ச்சி அடைவார்கள் என குறிப்பிட்டார். இங்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதால், குறிப்பாக பெண் பிள்ளைகளை நம்பி அனுப்புவார்கள் என்று அவர் கூறினார். தமிழக மக்கள் நட்பாக பழகி உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள் என்று தெரிவித்த கவர்னர் ஆர்.என்.ரவி, மாணவர்கள் ஒருங்கிணைந்து சமூக வலைதளங்கள் மூலம் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டு பயனடைய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்