செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் - ஜூலை 9-ந்தேதி நடைபெறுகிறது

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2022-06-22 07:00 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்கள் இடைத்தேர்தல் மூலம் நிரப்பப்பட உள்ளது. 2 ஊராட்சி ஒன்றிய வார்டு காட்டாங்கொளத்தூர் வார்டு-10, மதுராந்தகம் வார்டு-15 பதவியிடங்களுக்கும், 4 கிராம ஊராட்சி வார்டு திம்மாவரம் வார்டு எண்-4, பொன்பதிர்கூடம் வார்டு எண்-2, திரிசூலம் வார்டு எண்-1, நன்மங்கலம் வார்டு எண்-1 பதவியிடங்களுக்கும் இடைத்தேர்தகள் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டிய கடைசி நாள் வருகிற 27-ந் தேதியாகும். பெறப்படும் வேட்புமனுக்கள் அனைத்தும் 28-ந் தேதியன்று காலை 10 மணிக்கு பரிசீலனை செய்யப்பட்டு அன்றைய தினமே வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வேட்புமனுக்களை 30-ந் மாலை 3 மணி வரை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

இந்த தேர்தல்களுக்கு மொத்தம் 40 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவு ஜூலை 9-ந்தேதியன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள வாக்காளர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

இதில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் 12-ந்தேதி அன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்