ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்சங்க செயற்குழு கூட்டம்

தியாகதுருகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்சங்க செயற்குழு கூட்டம்

Update: 2022-06-25 16:18 GMT

தியாகதுருகம்,

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சரவணன், செல்வி, ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் மோகன்குமார் வரவேற்றார்.

கூட்டத்தில் வேலை மற்றும் செலவின அறிக்கைகளை மாவட்ட செயலாளர் சந்திரசேகர் வாசித்தார். தொடர்ந்து ஓய்வூதிய நிலைப்பாடு உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் கணேசன், குமரன், பொற்ச்செல்வி, சங்கீதா, ஆனந்தராஜ், சேகர் உள்பட 9 வட்டார நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் செல்வராஜ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்