தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஊழியர் நலனை புறக்கணிக்கும் அரசு நிர்வாகத்தை கண்டித்து 4 கட்ட போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்யும் போராட்டம் நடைபெற்றது.
கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த போராட்டத்துக்கு சங்க வட்டார தலைவர் பூபதி தலைமை தாங்கினார். இதில் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.