பெண்கள் பள்ளி மைதானத்தில் நடைபயிற்சிக்கு அனுமதிக்க கூடாது

Update: 2022-12-26 17:07 GMT


மாணவிகள் பாதுகாப்பு கருதி அவினாசி பெண்கள் பள்ளி மைதானத்தில் நடைபயிற்சி செல்ல அனுமதிக்க கூடாது என்று பள்ளி மேலாண்மை குழுவினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

இலவச வீட்டுமனைப்பட்டா

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர். கூட்டத்தில் 63 வேலம்பாளையம் பூமலூர் ஊராட்சி சின்னியம்பாளையம்புதூர் பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், கடந்த 20 ஆண்டுகளாக 100 குடும்பத்தினர் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். பலமுறை வீட்டுமனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்தும் இதுவரை கிடைக்கவில்லை. எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கி உதவ வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் அளித்த மனுவில், பள்ளி வளாகத்தில் கால்பந்து விளையாடுவதற்கு அனுமதிக்குமாறு சிலர் வந்து கேட்டனர். பள்ளி மாணவிகள் பாதுகாப்பு கருதி கால்பந்து விளையாடுவதற்கு பள்ளி மைதானத்தில் அனுமதிக்க முடியாது என்று பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் ஏற்க மறுத்து வாக்குவாதம் செய்தனர். எனவே நடைபயிற்சி, கால்பந்து விளையாடுவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது' என்று தெரிவித்துள்ளனர்.

தொகுப்பு வீடுகள் சீபெண்கள் பள்ளி மைதானத்தில் நடைபயிற்சிக்கு அனுமதிக்க கூடாதுரமைப்பு

திருப்பூர் செட்டிப்பாளையம் அண்ணாகாலனியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், 'கைத்தறி தொழில் செய்யும் நெசவாளர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு கடந்த 1993-ம் அண்டு தமிழகஅரசால் 58 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. அந்த வீட்டில் வசித்து வருகிறோம். தற்போது அந்த வீடுகள் மிகவும் பழுதடைந்துள்ளது. வீடுகளின் உள்புறம் மேற்கூரையில் இருந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்துவிழுகிறது. வீட்டுக்குள் இருக்கவே அச்சமாக உள்ளது. தொகுப்பு வீட்டை பராமரிக்க நிதி உதவி அளிக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

திருப்பூர் கணபதிபாளையம் திருமலை நகர் பகுதியை சேர்ந்தவர்கள்அளித்த மனுவில், 'திருப்பூர் அவினாசி ரோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வாங்கி, நிர்ணயிக்கப்பட்ட தவணையை விட கூடுதல் தவணைத்தொகை வசூலித்தனர். இதுகுறித்து கேட்டால் சரிவர பதில் தெரிவிக்கவில்லை. போலீசில் புகார் அளித்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களிடம் கூடுதலாக வசூலித்த தொகையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்