ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.;
தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு சார்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவில், "தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் வருகிற 22, 29-ந் தேதிகளில் ஊர்வலம் நடத்தப்போவதாகத் தெரிகிறது. கடந்த காலங்களில் இந்த அமைப்பு நடத்திய ஊர்வலத்தில் பல்வேறு இடங்களில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது'' என தெரிவித்துள்ளனர்.