முயல் வேட்டையாடிய 3 மாணவர்களுக்கு ரூ.75 ஆயிரம் அபராதம்

முயல் வேட்டையாடிய 3 மாணவர்களுக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.;

Update:2022-11-26 01:35 IST

கரூர் மாவட்டம், குளித்தலையைச் சேர்ந்த சரத் குமார் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் சிறுவர்கள் சிலர் முயலை நாய் வைத்து வேட்டையாடுவது போன்ற வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். வன விலங்குகளை வேட்டையாடுவது வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி குற்றம் என்ற நிலையில் திருச்சி மாவட்டம் வன அலுவலர் உத்தரவின் பேரில் வீடியோ பதிவிட்டவரை பிடித்து மணப்பாறை வனச் சரக அலுவலர் விசாரணை நடத்தினர். விசாரணையில் வையம்பட்டியை சேர்ந்த 3 மாணவர்கள் சேர்ந்து முயலை நாயை வைத்து வேட்டையாடியது தெரியவந்தது. இதையடுத்து 3 மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரை மணப்பாறை வனத்துறை அதிகாரிகள் அழைத்து விசாரணை நடத்திய நிலையில் 3 பேருக்கும் ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்தனர்.மேலும் இதுபோன்று வேட்டையில் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்