தமிழகத்தில் புதிதாக ஆயிரம் பேருந்துகள் வாங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழகத்தில் புதிதாக ஆயிரம் பேருந்துகள் வாங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் புதிதாக ஆயிரம் பேருந்துகள் வாங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் 500 பழைய பேருந்துகளை பழுது பார்க்கவும் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் கோட்டத்தில் 190 பேருந்துகள், கோவை கோட்டத்தில் 163 பேருந்துகள், கும்பகோணம் கோட்டத்தில் 155 பேருந்துகள், மதுரை கோட்டத்தில் 163 பேருந்துகள், திருநெல்வேலி கோட்டத்தில் 129 பேருந்துகள் என 800 பேருந்துகள் புதிதாக வாங்கப்பட உள்ளன. மேலும் புதிதாக 200 எஸ்இடிசி பேருந்துகளும் வாங்கப்பட உள்ளன.