ரூ.35.79 கோடியில் பள்ளி கட்டிடங்கள், பூங்காக்கள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.35.79 கோடி செலவில் செய்து முடிக்கப்பட்ட பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

Update: 2023-05-13 00:26 GMT

சென்னை,

சென்னையின் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் புதிய சாலை பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியின் சார்பில் தண்டையார்பேட்டை சர்மா நகரில் உள்ள சென்னை உயர்நிலை பள்ளி மற்றும் சென்னை தொடக்கப்பள்ளி; ராயபுரம் கல்லறை சாலை மணிகண்டன் தெருவில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளி மற்றும் சென்னை தொடக்கப்பள்ளி; அண்ணாநகர் செனாய்நகர், சுப்பராயன் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி மற்றும் சென்னை தொடக்கப்பள்ளி; அடையாறு காந்தி கிராமம் சென்னை நடுநிலைப்பள்ளி ஆகிய புதுப்பிக்கப்பட்ட பள்ளிகளை, சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

பூங்காக்கள் அமைக்கும் பணி

அம்பத்தூர் வானகரம் சாலை அத்திப்பட்டில் உள்ள திறந்தவெளி நிலம், டி.ஐ. சைக்கிள் சாலை ரெயில் விஹார் குடியிருப்பில் திறந்தவெளி நிலம், தாமிரபரணி தெருவில் உள்ள புது செஞ்சுரி ஆஸ்பத்திரி திறந்தவெளி நிலம், எம்ரால்டு பிளாட்ஸ் மின்வாரிய அலுவலகம் அருகிலுள்ள திறந்தவெளி நிலம், நாராயணா நகர் திறந்தவெளி நிலம், டி.வி.எஸ் அவென்யு 34-வது தெருவிலுள்ள திறந்தவெளி நிலம், திருமங்கலம் சாலை எச்.ஐ.ஜி. பிளாட்ஸ் திறந்தவெளி நிலம்;

சோழிங்கநல்லூர் - நூக்கம்பாளையம் இணைப்பு சாலை (மைக்ரோ சிப் ஐ.டி. நிறுவனம் அருகில்), விநாயகா நகர் மற்றும் ஒக்கியம் துரைப்பாக்கம் பவுண்டரி தெரு; வளசரவாக்கம் - நொளம்பூர் எஸ் அன்டு பி கார்டன் 8-வது தெரு மற்றும் ராமாபுரத்தில் திருவள்ளுவர் சாலை; மாதவரம் - தாங்கல் கரை சாலை; மாதவரம் - மீனாம்பாள் அவென்யூ (சாஸ்திரி நகர்), ஜெய் மாருதி நகர் (மேற்கு), மேட்டூர் இணைப்பு சாலை (எஸ்.ஐ.எஸ்.) கேப்டவுன்;

அடையாறு லீலா பேலஸ், சோமர்செட், ஜெயின் சகாரீகா ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 19 புதிய பூங்காக்களையும், சோழிங்கநல்லூர் சக்திநகரில் மறுசீரமைக்கப்பட்ட ஒரு பூங்காவையும் முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்.

விளையாட்டு திடல்கள்

ராயபுரம் காத்படா பிரதான சாலையில் உள்ள திறந்தவெளி நிலம், மாதவரம் ரிங் ரோடு மற்றும் எம்.ஜி.ஆர். 2-வது தெரு, ஆலந்தூர் சேதுலட்சுமி அவென்யூ, மதுரவாயல் கங்காநகரில் உள்ள காந்தி தெரு ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 5 புதிய விளையாட்டு திடல்களையும் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

கொடுங்கையூர் வார்டு 35, ராயபுரம் ராட்லர் தெரு (பெருமாள்பேட்டை) மற்றும் கொண்டித்தோப்பு, திரு.வி.க. நகர் வ.உ.சி. நகர் 1-வது தெருவில் புளியந்தோப்பு, அம்பத்தூர் முகப்பேர் மேற்கு காளமேகம் சாலை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 5 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடங்களை முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்.

அந்த வகையில் 7 பள்ளிகள் புதுப்பிக்கும் பணிகள், 19 புதிய பூங்காக்கள் அமைக்கும் பணிகள், ஒரு பூங்கா மறுசீரமைக்கும் பணி, 5 புதிய விளையாட்டு திடல்கள் அமைக்கும் பணிகள், 5 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடங்கள் கட்டும் பணிகள் என ரூ.35.79 கோடி செலவில் செய்து முடிக்கப்பட்ட பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்