சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு ரூ.16¼ லட்சம் நிதியுதவி; சக போலீசார் திரட்டி வழங்கினர்
உடல் நலக்குறைவால் இறந்த சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு சக போலீசார் நிதிஉதவி திரட்டி ரூ.16¼ லட்சம் வழங்கினர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே நாராயணத்தேவன்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 47). இவர் கடந்த 1997-ம் ஆண்டு போலீஸ் பணிக்கு சேர்ந்தார். சென்னை கொடுங்கையூரில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ஆனந்தன் கடந்த ஜூலை மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருடைய குடும்பத்திற்கு 1997-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த சக போலீசார் தங்களுக்குள் நிதி திரட்டி கொடுக்க முடிவு செய்தனர்.
இதற்காக சங்கமம் என்ற தங்களின் குழுவின் பெயரில் அவர்கள் தமிழகம் முழுவதும் சகபோலீசாரிடம் நிதி திரட்டினர். அந்த வகையில் ரூ.16 லட்சத்து 30 ஆயிரத்து 500 திரட்டப்பட்டது. இந்த நிதியை ஆனந்தன் மனைவி ஜெயபாரதி மற்றும் குடும்பத்தினரிடம் சக போலீசார் ஒப்படைத்தனர். இதில் 1997-ம் ஆண்டு பேட்ஜ் போலீசார் பங்கேற்றனர்.